ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின் கட்டண உயர்வு: மேட்டூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் மேட்டூரில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:28 am

DIN

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூரில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவரும்,அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தார். 

அதன்படி மேட்டூர் சதுரங்காடியில் இன்று காலை 11 மணிக்கு  தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஆர். இளங்கோவன் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் வரவேற்புரை ஆற்றினார்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான எஸ். செம்மலை கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மணி (ஒமலூர்), ராஜமுத்து (வீரபாண்டி), ஜெய்சங்கரன் (ஆத்தூர்), சுந்தர்ராஜன் (சங்ககிரி), சித்ரா (ஏற்காடு), நல்லதம்பி (கெங்கவல்லி), ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள், சிறுகுறு வியாபாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.