உள்ளாட்சியை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடிப்படைத் தேவைகள், பிரச்னைகளைத் தீர்ப்பதில் மக்களுடன் நேரடித் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நிதியும், அதிகாரமும் வழங்காவிட்டால், அதன் நோக்கமே சிதைந்துவிடும். அண்மையில் ஊராட்சித் தலைவர்களுக்கு நிதியும், அதிகாரமும் வழங்கக் கோரி தமிழ்நாடு ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் வழங்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுவது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிடும். மேலும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்களின் கோபத்துக்கு உள்ளாக நேரிடும்.
இந்த விவகாரத்தில் முதல்வரும், நிதி அமைச்சரும் தலையிட்டு கிராம ஊராட்சிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், ஊராட்சித் தலைவரின் அதிகாரத்தில், பிறர் தலையிடுவதை தடுத்து நிறுத்தி, அவர்கள் முழு சுதந்திரத்துடன் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபுதாபி மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயம்!

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிக் கணக்கைத் தொடங்குமா?

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- தேடப்படும் 2 சந்தேக நபர்கள்

அண்ணாமலை தவிர முக்கிய நிர்வாகிகளை ஓரங்கட்டிய பாஜக!
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


