மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வழக்குரைஞர்களுக்கு பாதுகாப்பு: சட்டம் இயற்றக் கோரி செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம்

வழக்குரைஞர்களுக்கு பாதுகாப்பு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து செங்கல்பட்டு வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
வழக்குரைஞர்களுக்கு பாதுகாப்பு: சட்டம் இயற்றக் கோரி செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம்
Updated On :20 செப்டம்பர் 2022, 8:03 am

DIN

செங்கல்பட்டு: வழக்குரைஞர்களுக்கு பாதுகாப்பு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து செங்கல்பட்டு வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மற்றும் திட்டக்குடி பகுதிகளில் வழக்குரைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து செங்கல்பட்டு நீதிமன்றத்தின் முன்பு சங்க தலைவர் ஸ்ரீபன்குமார் தலைமையில் சக வழக்குரைஞர்கள் பணியைப் புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து  100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

Story image

தமிழகத்தில் நாளுக்கு நாள் வழக்குரைஞர்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகின்றது. இதை தடுக்க நாடாளுமன்றத்தில் தனிச் சட்டம் இயற்றக் கோரி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.