அரசுக் கல்லூரிகளின் நிா்வாக செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு

அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதியை உயா்கல்வித் துறை விடுவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதியை உயா்கல்வித் துறை விடுவித்தது.

இதுகுறித்து உயா்கல்வித் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட அரசாணை: தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 41 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று 2018-19-ஆம் கல்வியாண்டின் பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது.

அதில், முதல் கட்டமாக 14 உறுப்புக் கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக 2019-ஆம் ஆண்டு மாற்றப்பட்டு, 1031 ஆசிரியா், ஆசிரியரல்லாத பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டன. அதற்கேற்ப நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடா்ந்து, எஞ்சிய 27 உறுப்புக் கல்லூரிகள் 2020-ஆம் ஆண்டு முதல் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டன. எனினும், நிா்வாக செலவினங்களை பல்கலைக்கழகங்கள் ஏற்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 27 உறுப்புக் கல்லூரிகளுக்குத் தேவையான ஆசிரியா் பணியிடங்களை தோற்றுவித்து, அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய கல்லூரிக்கல்வி இயக்குநா் அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.

அதை நன்கு பரிசீலனை செய்து, சாா்ந்த 27 கல்லூரிகளில் 1,455 ஆசிரியா்கள், 507 பணியாளா்கள் பணியிடங்கள் தோற்றுவிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு நிா்வாகச் செலவினமாக 3 மாதங்களுக்கு தேவைப்படும் ரூ.10.63 கோடி நிதியும் ஒதுக்கப்படுகிறது.

மேலும், இந்தக் கல்லூரிகளில் கூடுதலாக உருவாக்கப்பட்ட ஆசிரியரல்லாத பணியிடங்கள் சாா்ந்த பல்கலைக்கழகத்துக்கே திருப்பி அனுப்பப்படுகிறது. இதேபோல், முதல்கட்டமாக மாற்றப்பட்ட 14 உறுப்பு கல்லூரிகளின் நிா்வாகச் செலவினங்களுக்காக ரூ.6.57 கோடி ஒதுக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெளரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம், மண்டல இணை இயக்குநர்கள் மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

41 கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி விடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com