அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன்: ஓபிஎஸ் அறிவிப்பு
அதிமுகவின் அரசியல் ஆலோசகராக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.


அதிமுகவின் அரசியல் ஆலோசகராக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகிய இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டதையடுத்து அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வருகின்றன.
ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு நீக்குவதும், அதுபோல இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை ஓபிஎஸ் தரப்பு நீக்குவதும் என நிகழ்ந்து வருகிறது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில் அவரை அரசியல் ஆலோசகராக நியமித்துள்ளார்.
முன்னதாக, வெல்லமண்டி நடராஜன், ஆர்.டி.ராமச்சந்திரன், சி. திருமாறன், ஆர்.வி.பாபு ஆகியோரை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அதிமுக தலைமை அலுவலக விவகாரம்: ஓபிஎஸ் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...