காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் தனியாருக்குச் சொந்தமான எரிவாயு உருளைகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு உள்ளது. இதில் கடந்த செப்.28 ஆம் தேதி புதன்கிழமை வாயுக்கசிவு காரணமாக உருளைகள் வெடித்து சிதறின. இச்சம்பவத்தில் 6 ஆண்கள், 5 பெண்கள் ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 12 பேர் காயம் அடைந்தனர். தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த இவர்களில் கடலூரை சேர்ந்த ஆமோத்குமார்(26), சந்தியா(21) ஆகியோர் வியாழக்கிழமையும், சந்தியாவின் தந்தை ஜீவானந்தம்(46) வெள்ளிக் கிழமையும் உயிரிழந்தனர். உயிரிழப்புகள் இதுவரை 3 ஆக இருந்து வரும் நிலையில் மேலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.