இதுவரை 32 நோயாளிகள் மீட்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்திலிருந்து இதுவரை 32 நோயாளிகள் மீட்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுவரை 32 நோயாளிகள் மீட்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்திலிருந்து இதுவரை 32 நோயாளிகள் மீட்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வந்த தளத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் இன்று முற்பகல் 11 மணிக்கு திடீரென தீ விபத்து நேரிட்டது.

தீ விபத்து நிகழ்ந்த தளத்தின் சிமெண்ட் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, அதன் வழியாக குழாய்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

கல்லீரல் சிகிச்சைப் பிரிவில் சில நோயாளிகள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணியிம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவரை 32 நோயாளிகள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com