
தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையின் இரண்டாவது டவரின் பின்புறமுள்ள கல்லீரல் பிரிவில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தால் புகை அதிகளவில் காணப்படுவதால், கல்லீரல் சிகிச்சைப் பிரிவில் சிக்கியுள்ள நோயாளிகளை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியிலும், அருகாமை கட்டடங்களுக்கு தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க | தீ விபத்து: அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்களால் பதற்றம்
தீ புகையால் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தீ விபத்து ஏற்பட்ட கட்டங்களுக்கு அருகில் இருக்கும் நோயாளிகளையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | இதுவரை 32 நோயாளிகள் மீட்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீட்புப் பணிகளை மேற்பார்வை செய்து வருகின்றனர்.
Fire fighters doze the fire at Bradfiel surgical block Rajiv gandhi government general hospital in chennai. @NewIndianXpress @shibasahu2012 @haisat2005 @xpresstn . Video by Ashwin prasath pic.twitter.com/Xwhfd9VZdJ
— Ashwin Prasath (@ashwinacharya05) April 27, 2022