தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருப்புவனம் அருகே மொஹரம் பண்டிகை கொண்டாடிய இந்துக்கள்: தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே  கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை  மொஹரம் பண்டிகையை கொண்டாடிய இந்து மக்கள் பள்ளிவாசல் முன்பு தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றனர். 

News image
திருப்புவனம் அருகே முதுவந்திடல் கிராமத்தில் மொஹரம் பண்டிகை கொண்டாடிய இந்துக்கள் பள்ளிவாசல் முன்பு தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
Updated On :9 ஆகஸ்ட் 2022, 9:29 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே  கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை  மொஹரம் பண்டிகையை கொண்டாடிய இந்து மக்கள் பள்ளிவாசல் முன்பு தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். 

திருப்புவனம் அருகே முதுவந்திடல் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்து, முஸ்லிம் மக்கள் மத ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். காலப் போக்கில் கிராமத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேறிவிட்டதால் இந்து மக்கள் முஸ்லிம் மக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். 

இதற்காக கிராமத்தில் வாழும் இந்து மக்கள் மொஹரம் பண்டிகை அன்று தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்ற விரதம் தொடங்கினர். மொஹரத்தன்று காலை இங்குள்ள பள்ளிவாசல்  முன்பு இவர்கள் தீக்குண்டத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நெருப்பு குண்டத்தில் ஆண்கள் வரிசையாக வந்து தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். பெண்கள் தலையில் தீக்கங்குகளை கொட்டி பூ மொழுகுதல் செய்து வேண்டுதல் நிறைவேற்றினர். 

இவ்விழாவைக் காண முதுவந்திடல்  கிராமத்தில் இருந்து வெளியேறிய ஏராளமான முஸ்லிம் மக்களும் உள்ளூர் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்களும் முதுவந்திடல் கிராமத்தில் திரண்டிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.