தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து 610 சிறப்பு பேருந்துகள் இயக்கம் 

3 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் இன்றும், நாளையும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்க உள்ளது.  

News image

கோப்புப்படம்

Updated On :12 ஆகஸ்ட் 2022, 3:56 pm

DIN

3 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் இன்றும், நாளையும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்க உள்ளது. 

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே அன்றைய தினம் பொது விடுமுறையாகும். இதனிடையே நாளை மற்றும் நாளை மறுநாளும் வார இறுதி விடுமுறை வருவதால் அடுத்த 3 நாள்கள் தொடர் விடுமுறை நாள்களாக உள்ளது. 

இதை முன்னிட்டு சென்னையில் பணியாற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லவர். அவ்வாறு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி இன்றும், நாளையும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை இயக்க உள்ளது. மேலும் விடுமுறை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப போதுமான பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.