அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முதல்வர் சுற்றுப்பயணம்

 கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு 4 நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:06 am

DIN

சென்னை: கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள்  சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 26 வரை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சென்னை இருந்து விமானத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி கோவை செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிறார். மாலை பொள்ளாச்சியில் முதல்வர் முன்னிலையில் பிறகட்சியினர் திமுகவில் இணைகின்றனர்.

திருப்பூருக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதி செல்லும் முதல்வர், சிறு, குறு சிறுவனங்கள் சார்பில் நடைபெறும் 'தொழிலுக்கு தோள்கொடுப்போம்' மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஈரோடு செல்லும் முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.