
திருப்பூரில் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று முதல்வர் ஸ்டாலின் சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்கள், குழந்தைகளிடம் நலம் விசாரித்தார்.
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மண்டல மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாஸின் பொள்ளாச்சியில் இருந்து கார் மூலமாக புதன்கிழமை இரவு திருப்பூர் வந்தடைந்தார்.
படிக்க: தனுஷின் மகனுடன் கேப்டனான பிரபல நடிகரின் மகள் - வைரலாகும் புகைப்படம்
திருப்பூர் குமாரனந்தபுரம் பகுதியில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை காலை 9.40 மணி அளவில் புறப்பட்டார். அப்போது சாலையோரங்களில் திரண்டிருந்த பொதுமக்களைப் பார்த்ததும் ஓட்டுநரிடம் காரை நிறுத்தும்படி தெரிவித்துள்ளார். இதன் பின்னர் காரில் இறங்கி சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு அவிநாசி சாலை வரையில் நடந்தே சென்றார்.
படிக்க: மகளின் படத்தைப் பகிர்ந்த 'சந்திரமுகி' பொம்மி - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
அப்போது சாலையின் ஓரத்தில் திரண்டிருந்த பொதுமக்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தார். மேலும், பள்ளி மாணவிகள் மற்றும் குழந்தைகளிடம் கனிவுடன் நலம் விசாரித்தார். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.