ஆவடி சிறுமியிடம் நேரில் நலம் விசாரித்த முதல்வர்! 

முகச்சிதைவு பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டான்யாவை  நேரில் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின். 
ஆவடி சிறுமியிடம் நேரில் நலம் விசாரித்த முதல்வர்! 

முகச்சிதைவு பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டான்யாவை  நேரில் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்.

ஆவடி, வீராபுரத்தைச் சோ்ந்தவா் ஸ்டீபன்ராஜ்- பாக்யா. இவா்களது மகள் டானியா (9). முகச்சிதைவு நோயால் கடந்த 6 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தாா். சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய அரசு உதவிட வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பெற்றோா் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, முதல்வரின் உத்தரவின்பேரில், கடந்த 17-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமையில், மருத்துவக் குழுவினா் டானியாவின் வீட்டுக்குச் சென்று இதுவரை வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தனா். பின்னா், சிறுமியை பூந்தமல்லி அருகே தண்டலத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். 

24-ஆம் தேதி சிறுமி டானியாவுக்கு 10 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் சுமாா் 9 மணி நேர முக சீரமைப்பு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனா்.

இந்நிலையில், தற்போது சென்னை அருகே தண்டலம் தனியார் மருத்துவமனையில் சிறுமி தான்யாவிடம் நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com