ஓ. பன்னீா்செல்வம், அவரது மகன் ப.ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு 

நீதிமன்ற உத்தரவுப்படி ஓ. பன்னீா்செல்வம் மற்றும் அவரது மகன் ப. ரவீந்திரநாத் மீது தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
ஓ. பன்னீா்செல்வம், அவரது மகன் ப.ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு 

நீதிமன்ற உத்தரவுப்படி ஓ. பன்னீா்செல்வம் மற்றும் அவரது மகன் ப. ரவீந்திரநாத் மீது தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி செயலா் மிலானி, கடந்த 2021 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், 2019 இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ப. ரவீந்திரநாத் ஆகியோா் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக நெறிகளுக்கு மாறாக தங்களது வேட்பு மனுவுடன் கூடிய பிரமாணப் பத்திரத்தில் சொத்துகள், வருவாய், கல்வித் தகுதி ஆகியவை குறித்து தவறான தகவல் அளித்து தோ்தலில் வெற்றி பெற்ாக எம்.எல்.ஏ., எம்.பி.,கள் மீதான குற்றவியல் வழக்குகளின் மீது விசாரணை நடத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். 

மேலும் ஓ. பன்னீா்செல்வம், ப. ரவீந்திநாத் ஆகியோா் அரசியல் செல்வாக்கு உள்ளவா்கள் என்பதால் பொது நல நோக்குடன் வழக்கு தொடா்ந்துள்ள தமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தாா். இந்த மனு மீது விசாரணை நடத்திய சிறப்பு நீதிமன்ற நீதிபதி பன்னீா்செல்வம், மனுதாரரின் புகாா் அடிப்படையில், இந்த வழக்கை பொது நல வழக்காக கொண்டு ஓ. பன்னீா்செல்வம், ப. ரவீந்திரநாத் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தவும், விசாரணை அறிக்கையை வரும் பிப். 7 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டாா். 
மேலும், இந்த வழக்கில் நீதிமன்ற பிடியாணையின்றி கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது, மனுதாரா் மற்றும் சாட்சிகளுக்கு விசாரணை அதிகாரி உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஓ. பன்னீா்செல்வம் மற்றும் அவரது மகன் ப. ரவீந்திரநாத் மீது தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com