கட்டட அடித்தளக் குழிக்குள் லாரி கவிழ்ந்து விபத்து: கட்டடத் தொழிலாளி உடல் மீட்பு

குன்னத்தூர் அருகே அரண்மனை மாரியம்மன் கோயில் கட்டுமானப் பணியின்போது சிமென்ட் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பள்ளத்தில் இடிபாடுகளில் சிக்கிய கட்டடத் தொழிலாளியின் உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.
கட்டட அடித்தளக் குழிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி
கட்டட அடித்தளக் குழிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி

அவிநாசி: குன்னத்தூர் அருகே அரண்மனை மாரியம்மன் கோயில் கட்டுமானப் பணியின்போது சிமென்ட் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பள்ளத்தில் இடிபாடுகளில் சிக்கிய கட்டடத் தொழிலாளியின் உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே அரண்மனை மாரியம்மன் கோயிலில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதில், கோயில் மண்டபம் அமைப்பதற்காக தூண் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் குழிக்குள் இறங்கி கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, பெருமாநல்லூரில் இருந்து கான்கிரீட் சிமென்ட் கலவை கொட்ட வந்த லாரி, அஸ்திவாரக் குழியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரி திடீரென குழிக்குள் சரிந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

அடித்தளக் குழிக்குள் சிமென்ட் கலவையுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி

குழிக்குள் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக மேலே ஏறி உயிர் தப்பினர். இருப்பினும் திங்களூர் பாப்பம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ராமசாமி(42)  லாரியின் அடியில் மண்ணுக்குள் சிக்கியது தெரியவந்தது.

பிறகு செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி முதல் குன்னத்தூர் போலீசார், தீயணைப்புத்துறையினர் கிரேன், பொக்லைன் இயந்திரங்கள் மூலம், லாரியையும், உள்ளே இடிபாடுகளுக்குள் சிக்கிய ராமசாமியை மீட்பதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். 

கட்டட அடித்தளக் குழிக்குள் தலைகீழாக கவிழ்ந்த லாரி

இரவு விடிய, விடிய நடைபெற்ற மீட்புப் பணியையடுத்து, புதன்கிழமை அதிகாலை லாரிக்கு அடியில் மண்ணுக்குள் சிக்கியிருந்த ராமசாமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். 

இதுகுறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டுமானப் பணி ஒப்பந்ததாரர் சந்திரன், லாரி ஓட்டுநர் வெங்கடாசலம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com