
ஓ.பன்னீர்செல்வம் / ஆர்.வைத்திலிங்கம் (கோப்புப் படங்கள்)
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக ஆர்.வைத்திலிங்கம் நியமிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் தொடர் குழப்பம் நீடித்து வரும் நிலையில்,
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக பொறுப்பாளர்களை நியமித்தும், நீக்கம் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக ஆர்.வைத்திலிங்கம் நியமிக்கப்படுவதாக ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களையும் நீக்கம் செய்துள்ளார்.
படிக்க | இபிஎஸ் மீதான டெண்டர் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு.ப.கிருஷ்ணன், ஜேடிசி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவிலிருந்து சிறுணியம் பலராமன், எம்.சி.சம்பத், சொரத்தூர் ராஜேந்திரன், பாலகிருஷ்ண ரெட்டி, உடுமலை ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன், ராஜேந்திர பாலாஜி, கிருஷ்ணமுரளி, கடம்பூர் ராஜு, வி.எஸ்.சேதுராமன் உட்பட 10 பேரை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...