மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

‘செஸ் ஒலிம்பியாட் இந்தியாவிற்கு பெருமைமிகு தருணம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது இந்தியாவிற்கு பெருமைமிகு தருணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது இந்தியாவிற்கு பெருமைமிகு தருணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தொடக்க நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது இந்தியாவிற்கு பெருமைமிகு தருணம். இந்தியாவில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக அழைப்பிதழுடன் தில்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தபோது திடீர் கரோனா தொற்று ஏற்பட்டதால் செல்ல முடியவில்லை. அப்போது பிரதமர் மோடி என்னை தொடர்பு கொண்டார். அப்போது அவர், “நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நான் கட்டாயம் கலந்து கொள்வேன்” எனத் தெரிவித்தார். உங்களின் பங்கேற்பு மேலும் சிறப்பு செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ரஷியாவில் நடக்கவிருந்த இந்தப் போட்டியை தமிழ்நாட்டில் நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். நான்கே மாதங்களில் பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டின் மதிப்பு இன்று முதல் மேலும் உயருகிறது. இது மிக சாதாரணமாக கிடைத்துவிடுவதில்லை. இந்திய துணைக்கண்டத்தில் முதல்முறையாக இந்தப் போட்டி நடக்கிறது. இரு அரசர்கள், இரு கோட்டைகள், இரு குதிரைகள், இரு அமைச்சர்கள் என கருப்பு வெள்ளை களமாகவே செஸ் உள்ளது. கீழடியில் இரு வகையான ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன. அவை சதுரம் விளையாட பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

போர் மரபிற்கும் தமிழர்களுக்கும் தொடர்பிருப்பது இவை காட்டுகின்றன. பல்லாயிரம் ஆண்டு தொடர்பு தமிழர்களுக்கும், சதுரங்கத்திற்கும் உள்ளது. அறிவுடன் தொடர்புடைய விளையாட்டு சதுரங்கம். மூளை சார்ந்த இந்த விளையாட்டு அறிவை நம்பிய விளையாட்டு. இந்த விளையாட்டை தமிழகத்தில் இந்தியாவில் மேலும் பரவச் செய்ய இந்தப் போட்டி உதவியாக இருக்கும். அதற்கு இந்த ஒலிம்பியாட் சிறப்பான துவக்கமாக இருக்கும் என நான் நம்புகிறேன்.” என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com