செஸ் ஒலிம்பியாட்டில் ஒலித்த ‘என்ஜாய் எஞ்சாமி’: பாடகர் அறிவு இல்லாமல் அரங்கேறியது ஏன்?

செஸ் ஒலிம்பியாட்டில் ஒலித்த ‘என்ஜாய் எஞ்சாமி’: பாடகர் அறிவு இல்லாமல் அரங்கேறியது ஏன்?

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் என்ஜாய் எஞ்சாமி புகழ் தெருக்குரல் அறிவு மேடை நிகழ்ச்சியில் பங்கேற்காதது விவாதமாகியுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் என்ஜாய் எஞ்சாமி புகழ் தெருக்குரல் அறிவு மேடை நிகழ்ச்சியில் பங்கேற்காதது விவாதமாகியுள்ளது. 

சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தெருக்குரல் அறிவு மற்றும் பாடகர் தீ பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து ரோலிங்ஸ்டோன் இதழில் அப்பாடலை பாராட்டும் வகையில் பாடகி தீ படம் இடம்பெற்றது. இதில் தெருக்குரல் அறிவு படம் இடம்பெறாதது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பா.ரஞ்சித் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இடையே மோதல் வெடித்தது. 

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் என்ஜாய் எஞ்சாமி பாடல் இசைக்கப்பட்டது. இதில் பாடகர் தீ மற்றும் மாரியம்மாள் கலந்து கொண்டு பாடலைப் பாடினர். ஆனால் தெருக்குரல் அறிவு மேடையில் இடம்பெறவில்லை. என்ஜாய் எஞ்சாமி பாடலின் வெற்றிக்கு தெருக்குரல் அறிவின் பங்கு முக்கியமானது எனும் நிலையில் அவர் மேடையில் இடம்பெறாதது சர்ச்சையாகியுள்ளது.

தெருக்குரல் அறிவு செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்காதது குறித்து இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com