புதுகை தேர் கவிழ்ந்து விபத்து: அண்ணாமலை கண்டனம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்திலுள்ள பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருகோயிலின் தேர் விபத்துக்கு அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம்
புதுகை தேர் கவிழ்ந்து விபத்து: அண்ணாமலை கண்டனம்


புதுக்கோட்டை திருக்கோகர்ணத்திலுள்ள பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருகோயிலின் தேர் விபத்துக்கு அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எனத் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்திலுள்ள பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருகோயிலின் தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

அப்போது எதிர்பாராத விதமாக தேர் சரிந்து முற்றிலுமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நல்வாய்ப்பாக எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. 6 பக்தர்கள் காயமடைந்தனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தேர் விபத்துக்கு அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க | 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை புதுக்கோட்டை திருக்கோகர்ணத்திலுள்ள பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருகோயிலின் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது என்ற செய்தி கவலை அளிக்கிறது.

தமிழகத்தில் சமீபத்தில் தஞ்சை, தர்மபுரி, உளுந்தூர்பேட்டை எனத் தொடர்ச்சியாக தேர் விபத்துக்குள் நடைபெற்று வருகின்றது.

ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நிகழ்ந்த தேர் விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாஜக சார்பாக மாவட்ட தலைவர் செல்வன் அழகப்பன் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். 

அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கும், இந்து சமய அறநிலையத் துறையின் திறனற்ற செயற்பாட்டாலும் இதுபோன்ற தேர் விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 

காயமடைந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் உடனடியாக திமுக அரசு வழங்க வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com