/

தமிழகத்தில் மேலும் 1,467 பேருக்கு கரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,467 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:56 am

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,467 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 1,467 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,44,246-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 316 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 144, கோவை 148, பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கரோனா உயிரிழப்பு இல்லை. எனினும், மொத்த உயிரிழப்பு 38,032 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 1,890 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,93,543-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 12,671 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.