இன்று இரவு தில்லி பயணம் மேற்கொள்வது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.
ஒற்றைத் தலைமை சர்ச்சைக்கு மத்தியில் இன்று காலை அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவித்ததுடன் ஜூலை 11இல் மீண்டும் பொதுக்குழுக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 11ஆம் தேதி ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | பாஜகவில் இணைந்த திருச்சி சிவா மகன் கைது: அவரே விளக்கும் காரணம்
இந்நிலையில், அதிமுக உள்கட்சி விவகாரம் பற்றி தேர்தல் ஆணையத்தில் முறையிடுவது குறித்து இன்று ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியதாக கூறப்படும் நிலையில், இரவு 9 மணியளவில் விமானம் மூலம் தில்லி செல்கிறார்.
இதையும் படிக்க | மீண்டும் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படுமா?
தில்லி பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்பதற்காக பாஜக அழைப்பின் பேரில் செல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.