தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்தைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை.
Updated On :9 மார்ச் 2022, 2:55 am

DIN

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலின் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை ராஜஅனுக்ஞையும், செவ்வாய்க்கிழமை தேவஅனுக்ஞையும் நடைபெற்றது. 

புதன்கிழமை கொடியேற்று விழாவை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் காலை 6.45 மணிக்கு மேல் கொடியேற்றம் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கொடி மரம், நந்தி, பலிபீடம்  ஆகியவற்றிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. 

திருவிழா நாள்களில் தினமும் சுவாமி வீதியுலா நடைபெறும்.

9 ஆம் திருநாளான மார்ச் 17 ஆம் தேதி காலை 7 மணிக்கு சுவாமி தேருக்கு செல்லுதல் நிகழ்ச்சியும், 10.30 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெறும். 18 ஆம் தேதி இரவு 8 மணிக்கு தவசுக் காட்சியும், 19 ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு மேல் திருக்கல்யாணமும் நடைபெறும்.

கொடியேற்று நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், சமூக ஆர்வலர்கள் முருகன உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க | குடும்பத் தலைவிகள் பெயரில் அரசு வீடுகள்: முதல்வா் அறிவிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.