தமிழ்நாட்டில் புதிதாக 77 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 77 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தமிழ்நாட்டில் புதிதாக 77 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக மொத்த பாதிப்பு நூறுக்கும் கீழ் குறைந்து 77 ஆகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | ‘எஸ்.பி. வேலுமணி கிரிப்டோவில் முதலீடு’: லஞ்ச ஒழிப்புத் துறை
மேலும் 169 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,13,087 பேர் குணமடைந்துள்ளனர்.
உயிரிழப்புகள் ஏதும் பதிவாகாததால் மொத்த பலி எண்ணிக்கை 38,024 ஆக நீடிக்கிறது.
இன்றைய நிலவரப்படி நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக 962 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...