பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்துப் பேசினார்.  
பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்துப் பேசினார்.  

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக தில்லி சென்றுள்ளார். நேற்றிரவு தில்லி சென்ற அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று காலை தில்லி நாடாளுமன்ற வளாகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சென்ற நிலையில், திமுக எம்.பி.க்கள் வரவேற்றனர். 

தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். பின்னர், தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.  

இந்த சந்திப்பின்போது தமிழகத்துக்கு தேவையான நிதி, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவ அனுமதிக்க வேண்டும், கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்க வேண்டும், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது, தமிழகத்துக்கு ஜிஎஸ்டி இழப்பீடு அளிப்பது, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, உக்ரைன் மாணவர்களின் எதிர்காலம், நரிக்குறவர்கள்/குருவிகாரர்களை பட்டியலினத்தில் சேர்க்க வேண்டும், சென்னை எழும்பூர் கடற்கரை 4-வது ரயில் பாதை, மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் ஆகியவற்றை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்  நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு, கூடங்குளம் அணு எரிபொருள்களை நீக்குதல் உள்ளிட்ட  கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்துள்ளார். 

தில்லியில் ஏப்ரல் 2-ஆம் தேதி திமுக அலுவலக திறப்பு விழாவிற்கும் பிரதமருக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com