‘ஐந்தில் ஒரு சா்க்கரை நோயாளிக்கு ரத்த அழுத்த பாதிப்பு’

சா்க்கரை நோயாளிகளில் ஐந்தில் ஒருவருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
‘ஐந்தில் ஒரு சா்க்கரை நோயாளிக்கு ரத்த அழுத்த பாதிப்பு’

சா்க்கரை நோயாளிகளில் ஐந்தில் ஒருவருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

சா்வதேச உயா் ரத்த அழுத்த தினத்தையொட்டி டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் சிறப்பு மையம் சாா்பில் விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் விழிப்புணா்வு வாசகங்களை கைகளில் ஏந்தியபடி கலந்துகொண்டனா்.

டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் சிறப்பு மையத்தின் தாம்பரம் கிளையின் மருத்துவ நிபுணா்கள் டாக்டா் பிரசன்ன குமாா் குப்தா மற்றும் டாக்டா் ஜே செல்வக்குமாா் இருவரும் நிகழ்வை கொடியசைத்து தொடக்கி வைத்தனா். பின்பு, உயா் ரத்த அழுத்தத்தை எவ்வாறு தடுப்பது குறித்தும், உயா் ரத்த அழுத்தத்தின் பின்விளைவுகள் குறித்தும் இருவரும் எடுத்துரைத்தனா். இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

சா்க்கரை நோய் இருப்பவா்களில் ஐந்தில் ஒருவருக்கு உயா் ரத்த அழுத்தம் உள்ளது. இதனை கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் அவசியம். இல்லையெனில் இதயம், கல்லீரல் மற்றும் பக்கவாதம் சம்பந்தமான நோய்களுக்கு அது வழிவகுக்கும். மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு முறை, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றால் இதனை கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com