படிப்பறிவற்றவர்களுக்கும் கல்வி அளிக்க நடவடிக்கை: அமைச்சர்

படிப்பறிவற்ற 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கல்வி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
படிப்பறிவற்றவர்களுக்கும் கல்வி அளிக்க நடவடிக்கை: அமைச்சர்


படிப்பறிவற்ற 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கல்வி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-27 வழிகாட்டு நெறிமுறைகள் கூட்டம் வேலூரில் நடைபெற்றது. 

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 5 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை வழங்கும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

இதற்காக ₹9.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்கத் தெரியாதவர்களை பள்ளி மாணவர்களின் உதவியுடன் கண்டறிந்து, அவர்களுக்கு கல்வி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்குள் கல்வி கற்றவர்களின் சதவிகிதத்தில் தமிழகம் முதல் மாநிலமாக இருக்க வேண்டும். 

வயதானவர்கள் கல்வியறிவு இல்லாததால் கையெழுத்தோ அல்லது கைநாட்டோ போடுவதால் பலவித இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதைத் தடுக்கவே இந்த இயக்ககம் மூலம் கல்வி அளிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com