
கோப்புப்படம்
6 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை வடக்கு சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக இருந்த மாதவன், சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாக இருந்த அசோக் குமார், கோவை போக்குவரத்துக் காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை போக்குவரத்துக் காவல்துறை ஆணையர் மதிவாணன், கோவை வடக்கு சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தமபாளையம் காவல்துறை உதவு கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, விளாத்திகுளம் காவல்துறை உதவி கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: தமிழக அரசு நியாய விலைக்கடையில் மாபெரும் வேலைவாய்ப்பு!
2019, 2020-ல் பயிற்சி முடித்த 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உதவி காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக உள்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...