சென்னையில் ரூ. 43.41 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: விமான நிறுவன ஊழியர் கைது!

சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில்  ஏர்-இந்தியா நிறுவன ஊழியரை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்ததில் அவரிடம் இருந்து ரூ.45 லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள 988 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து
சென்னையில் ரூ. 43.41 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: விமான நிறுவன ஊழியர் கைது!


சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில், ஏர்-இந்தியா நிறுவன ஊழியரை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்ததில் அவரிடம் இருந்து ரூ.45 லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள 988 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திறஅகு பெருமளவில் கட்த்தல் பொருள்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜொல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

அப்போது விமான நிலையத்தில் உல்ள வரி இல்லா பொருள்கள் விற்பனை கடை முன் நின்றிருந்த ஏர்-இந்தியா நிறுவன ஊழியரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரிடம் இருந்த பையை சோதனையிட்டனர். அதில் தங்க பசைகள் மறைந்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.43 லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள 988 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவரிடம் விசாரணை நடத்தியதில், துபையில் இருந்து இண்டிகோ ஜி.இ. 66 என்ற விமானத்திலிருந்து சென்னை வந்திறங்கி, ஜி.இ. 1207 என்ற விமானத்தில் கொழும்பு சென்ற இலங்கையைச் சேர்ந்த பயணி ஒருவர் விமானம் மாறும் இடத்தில் தம்மிடம் இருந்த பையை விமான ஊழியரிடம் தந்து வெளியே கொண்டுவர சொல்லி தந்ததாக தெரிவித்தார். 

இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் ஏர்-இந்தியா நிறுவன ஊழியரை கைது செய்து தங்கத்தை தந்துவிட்டு தப்பிச் சென்றவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com