யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காவிரி கரையோர மக்களுக்குத் தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை!

மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும், நீர் திறப்பும் 1.75 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. 

News image
Updated On :18 அக்டோபர் 2022, 6:50 am

DIN

மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும், நீர் திறப்பும் 1.75 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. 

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இரு அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. 

மேலும், இருமாநில எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று  நிலவரப்படி 1.85 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து 1.75 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது

இன்று அணைக்கான நீர்வரத்து 1.75 லட்சம் கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிக்கும் நிலையில், அணைக்கு வரும் நீர் முழுமையாக ஆற்றில் திறந்து விடப்படுகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக 21 ஆயிரத்து 500 கனஅடி, உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 1லட்சத்து 53 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 93.47 டி.எம். சியாக உள்ளது.அணையின் நீர்மட்டம் கடந்த 12ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து 7வது நாளாக இன்றும் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.75 லட்சம் கனஅடியாக இருப்பதால் மேட்டூர் அணையின் வலது மற்றும் இடது கரையில் நீர்வளத் துறை அதிகாரிகள், பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒருமணி நேரத்திற்கு ஒரு முறை நீர்வரத்து மற்றும் திறப்பு குறித்துக் கணக்கிடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.