ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த பெண்ணை கரம்பிடித்த அரசு கல்லூரி பேராசிரியர்!

ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து படித்து வந்த பட்டதாரி இளம் பெண் திலகவதியை, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் கணிதவியல் பேராசிரிய வியாழக்கிழமை சீர்திருத்த முறையில் திருமணம் செய்து கொண்டார்.
ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த பெண்ணை கரம்பிடித்த அரசு கல்லூரி பேராசிரியர்!



கடந்த 17 ஆண்டுகளாக யாரும் இல்லாத நிலையில் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து படித்து வந்த பட்டதாரி இளம் பெண் திலகவதியை, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் கணிதவியல் பேராசிரிய வியாழக்கிழமை சீர்திருத்த முறையில் திருமணம் செய்து கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியில் இயங்கி வரும் சரணாலயம் கருணை இல்லத்தில் வளர்ந்த  இளம் பெண் திலகவதி (27) இவருக்கு யாரும் இல்லாததால் கடந்த 17 ஆண்டுகளாக இந்த கருணை இல்லத்தில் வளர்ந்து பட்டம் பெற்றார்.

இந்நிலையில், ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (35), கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் கணிதவியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த இளம்பெண் திலகவதியை நேற்று சீர்திருத்த முறையில் திருமணம் செய்து கொண்டார். 

திருமணம் முடித்த மணமக்கள் இருவரும் மணமேடையில் இருந்து கீழே இறங்கி, திருமண விழாவில் கலந்து கொண்ட நண்பர்கள் மத்தியில் நடந்து சென்று வாழ்த்துகளைப் பெற்றனர். திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com