அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் பங்கேற்பு

சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்திவைத்தனர். 

News image
Updated On :5 செப்டம்பர் 2022, 7:51 am

DIN

சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்திவைத்தனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களுக்கு இக்கோயில் குலதெய்வமாக உள்ளது.

Story image

அதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருக்கு இக்கோயில் குலதெய்வக் கோயிலாகும். சிதிலமடைந்த   இக்கோயில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளை கடந்து விட்டதால் கோயிலை புனரமைத்து துர்கா ஸ்டாலின்  முன்னிலையில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றது.

திருப்பணிகள் நிறைவடைந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 33 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வெகு விமரிசையாக யாகசாலை பூஜை நடைபெற்று வந்தது.

Story image

இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து புனித நீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க புறப்பட்டது. துர்கா ஸ்டாலின், அவரது மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், ஸ்டாலின் மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தி மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் புனித நீர் அடங்கிய கடங்கள் முன்பு கோயிலை வலம் வந்தனர்.

பின்னர் கோயில் விமான கலசம், ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதி கலசங்களில் துர்கா ஸ்டாலின் பச்சைக் கொடியை அசைத்து காட்டிட புனித நீர் சிவாச்சாரியார்களால் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Story image

இவ்விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன்  விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.