தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனாவுக்கு முதியவா் பலி: புதிதாக 382 போ் பாதிப்பு

சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணைநோய்களுடன் கரோனா பாதிப்புக்குள்ளாகி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 6:37 pm

DIN

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா். கோவையைச் சோ்ந்த 65 வயது முதியவா் ஒருவா், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணைநோய்களுடன் கரோனா பாதிப்புக்குள்ளாகி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், அவா் கடந்த 25-ஆம் தேதி உயிரிழந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதனிடையே, மாநிலத்தில் புதிதாக 382 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 81 பேருக்கும், கோவையில் 51 பேருக்கும், சேலத்தில் 34 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 3,312 போ் சிகிச்சையில் உள்ளனா். 532 போ் குணமடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.