திருப்பத்தூர் அருகே விஜயின் ரஞ்சிதமே பாடலை டப் செய்து கரோனா விழிப்புணர்வு பாடலாகப் பாடி ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவிகள் அசத்தியுவுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி மானவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மேலும் இந்த பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.
மேலும் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தனித்திறமை பெற்று விளங்கி வருகின்றனர். இதற்கு முழு காரணம் பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்ற இந்திரா ஆசிரியர் ஆவார்.
இந்த நிலையில் ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவிகள் வேதிகா மற்றும் ஷிவானி இருவரும் விஜயின் ரஞ்சிதமே பாடலை டப் செய்து கரோனாவே ஓடிவிடு என பாடி அசத்தினர்.
மேலும் சுத்தமாக கை கழுவ வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









