
நெல்லை சாந்தி நகரில் கார் கம்பெனி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சாந்தி நகர் 27-வது தெருவில் வசித்து வருபவர் அபுதாகிர். இவர் கார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கேடிசி நகரில் உறவினர் வீட்டிற்கு கடந்த 25 ஆம் தேதி சென்று விட்டு, நேற்று 28 ஆம் தேதி இரவு தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சாவியை எடுத்து பீரோவில் இருந்த 15 சவரன் நகை, ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவை கொள்ளை சம்பவம் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த அபுதாகிர், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் பொறுப்பு. வாசிவம் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
மேலும், தடவியல் நிபுணர்கள் வீட்டில் கைரேகைகளை சேகரித்தனர். இது குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.