விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த நகர்வு இதுதான்!
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கப் பணிகளை தற்போது தீவிரப்படுத்தியுள்ளார்.
கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கல்வி நிகழ்ச்சியில் ஊக்கத்தொகை வழங்கினார்.
இதையும் படிக்க | ரூ. 10 புகார் - டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப் மெஷின்கள்: டெண்டர் வெளியீடு
தொடர்ந்து கடந்த ஜூலை 15 ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளையொட்டி ஏழை மாணவ, மாணவிகளுக்கு மாலை நேர வகுப்புகளை தொடங்கியது விஜய் மக்கள் இயக்கம்.
இதுபோன்ற சேவைகளைத் தொடங்கி வரும் இந்த இயக்கம் அடுத்த நகர்வாக இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு செய்துள்ளது.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 'விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 'இலவச சட்ட ஆலோசனை மையம்' அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, விஜய்யின் அறிவுரைப்படி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வழக்கறிஞர் அணி செயல்பட வேண்டிய விதம் குறித்து அறிவுறுத்தப்பட்டது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.