கோவையில் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து
கோவையில் காஸ்மெட்டிக் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்றரை கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.


கோவையில் காஸ்மெட்டிக் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்றரை கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
கோவை ராம்நகர், ராஜாஜி வீதி பகுதியில் நிக்கித் என்பவருக்கு சொந்தமான காஸ்மெட்டிக்(அழகுசாதன பொருட்கள்) மொத்த விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. மூன்று மாடி கட்டடத்தில் செயல்பட்டு வரும் இதில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

முதல் தளத்தில் மளமளவென பிடித்த தீ இரண்டாவது மாடித் தளத்திலும் தீ பரவியுள்ளது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இரண்டு தீயணைப்பு வாகனத்தின் மூலம் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் இருந்து நாசமாயின. மேலும் போலீசார் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தீ விபத்து தொடர்பாக காட்டூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...