நெல்லையில் ஊராட்சி வார்டு உறுப்பினர் வெட்டிக்கொலை!
திருநெல்வேலியில் ஊராட்சி வார்டு உறுப்பினர் மர்மநபர்களால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஊராட்சி வார்டு உறுப்பினர் மர்மநபர்களால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி அருகேயுள்ள கீழநத்தம் வடக்கூரைச் சேர்ந்த நாராயணன் மகன் ராஜாமணி (32). இவர் கீழநத்தம் ஊராட்சியின் 2 -ஆவது வார்டு உறுப்பினராகப் பணியாற்றி வந்தார். ஞாயிற்றுக்கிழமை கீழநத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்மகும்பல் ராஜாமணியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியதாம்.
அருகில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த ராஜாமணியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.

மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கீழநத்தம் ஊராட்சியின் 2 -ஆவது வார்டு உறுப்பினர் ராஜாமணி.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
கொலையை கண்டித்து ராஜாமணியின் உறவினர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனை முன்புள்ள சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் மருத்துவமனை வளாகம், கீழநத்தம் ஊராட்சி பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...