அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இளைஞர் வெட்டிக் கொலை: காதலி, காதலியின் தந்தை உள்பட 8 பேர் கைது

காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காதலி, காதலியின் தந்தை, சகோதரர், கூலிப்டையினர் என மொத்தம் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image
கொல்லப்பட்ட சக்திவேல்
Updated On :16 ஆகஸ்ட் 2023, 5:43 am

DIN

தஞ்சாவூர்: காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காதலி, காதலியின் தந்தை, சகோதரர், கூலிப்டையினர் என மொத்தம் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது இளைய மகன் சக்திவேல் (23). தனியார் பால் கம்பெனியில் ஓட்டுநராக பணியாற்றி வந்துளளார்.  இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி வீட்டைவிட்டு சென்ற சக்திவேல் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது அண்ணன் சரவணன் வல்லம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் வல்லம் காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி அன்று அம்மாபேட்டை அருகே ராராமுத்திரைக்கோட்டை பகுதியில் உள்ள புது ஆற்றில் வெட்டுக் காயங்களுடன் வாலிபர் ஒருவரின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சில அடையாளங்களை பார்த்து அது சக்திவேல் என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் சக்திவேலுக்கும்,  அய்யாசாமிப்பட்டியை சேர்ந்த பாலகுரு என்பவரின் மகள் தேவிகா (19) என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இந்நிலையில் தேவிகாவின் தந்தை பாலகுரு, வல்லம்புதூர் விஏஓ வள்ளி என்பவரிடம் சரண் அடைந்துள்ளார். தொடர்ந்து சக்திவேலுவை மதுரையிலிருந்து கூலிப்படையை அழைத்து வந்து கொலை செய்ததை ஒப்புதல் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். பின்னர் விஏஓ வள்ளி, வல்லம் போலீசாரிடம் பாலகுருவை ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தன் மகள் தேவிகாவை சக்திவேல் காதலித்து வந்ததை அறிந்த பாலகுருவுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. மேலும் தனது மகளை சக்திவேலுவுக்கு திருமணம் செய்து வைக்க பாலகுருவுக்கு விருப்பம் இல்லை. இதனால் தனது நண்பர் சத்யா என்பவர் மூலம் மதுரையிலிருந்து கூலிப்படையை அழைத்து வந்து வெட்டி கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இதற்கு பாலகுருவின் மகன் துரைமுருகன், வேலை பார்க்கும் கதிர்வேல் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். பின்னர் சக்திவேலுவின் உடலை ஒரு வாகனத்தில் மறைத்து எடுத்துச் சென்று குருவாடிப்பட்டி பகுதியில் புது ஆற்றில் வீசியுள்ளனர். மேலும் அவர் வந்த பைக்கையும் ஆற்றில் வீசியது தெரிய வந்துள்ளது.

மேலும் சக்திவேலை கொலை செய்ய தனது தந்தை திட்டம் தீட்டியது தேவிகாவிற்கும் தெரிந்துள்ளது. தொடர்ந்து சத்யா,  துரைமுருகன், கதிர்வேல், தேவிகா ஆகியோரை வல்லம் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் பாலகுருவிடம் மீதி பணத்தை வாங்க வந்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்த போலீசார் அவர்களையும் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட பாலகுரு (48), அவரது மகன் துரைமுருகன் (19), மகள் தேவிகா (20), சத்யா (34), கதிர்வேல் (45), கூலிப்படையை சேர்ந்த கிரிவாசன் (45), சந்தோஷ்குமார் (44), கார்த்தி (35) ஆகிய 8 பேரையும் தஞ்சை நீதிமன்றத்தில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். பின்னர் தேவிகா திருச்சி சிறையிலும், மற்ற 7 பேரும் புதுக்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.