பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்ட தேதி மாற்றம்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் நாளை நடைபெறவிருந்த திமுகவின் உண்ணாவிரதப் போராட்ட தேதி மாற்றம் செய்யப்பட்டுளள்து.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2023, 7:55 am

DIN


சென்னை: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் நாளை நடைபெறவிருந்த திமுகவின் உண்ணாவிரதப் போராட்ட தேதி மாற்றம் செய்யப்பட்டுளள்து.

மதுரையில் திமுக சார்பில் நாளை நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டம் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.20) நடைபெறும் என்று அமைச்சா் பெ. கீதாஜீவன் அறிவித்திருந்தார். 

இதுகுறித்து அவா் வெளியிட்டிருந்த அறிக்கையில், நீட் தோ்வை தடைசெய்யாத மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் எதிா்ப்புத் தெரிவித்து திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சாா்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதன்படி, தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக

இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சாா்பில் தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.

இப்போராட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான பி.கீதாஜீவன், தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள்

பங்கேற்கின்றனா். திமுக துணைப் பொதுச்செயலரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி உண்ணாவிரதத்தை முடித்து வைத்துப் பேசுகிறாா்.

கட்சி நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆா்வலா்கள், நீட் தோ்வால் பாதிக்கப்பட்ட மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், நீட் தேர்வை எதிர்த்து மதுரையில் நாளை நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.