பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கல்வியால் தகுதி வரட்டும்! நீட் எதிர்ப்பில் தமிழ்நாடு வெல்லும்!!

எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்கொண்டு நீட் தேர்வுக்கு எதிரான போரில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்: மு.க. ஸ்டாலின்

News image
Updated On :20 ஆகஸ்ட் 2023, 5:09 am

DIN

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்நாடு வெற்றி பெறும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.  

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தொடக்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய துரைமுருகன்,  அதிமுக எழுச்சி மாநாடு நடைபெற்றுவரும் மதுரை தவிர மற்ற மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள திமுக,

கல்வியால் தகுதி வரட்டும்! தகுதி பெற்றால் மட்டுமே கல்வி எனும் அநீதி நீட் ஒழியட்டும்! எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்கொண்டு நீட் தேர்வுக்கு எதிரான போரில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்! எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.