3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நான் மட்டும் தான் கிடைக்கிறேன் என என்னிடம் மட்டும் கேள்வி கேட்கிறீர்கள்.. இப்படி சொன்னது?

நான் மட்டும் தான் உங்களுக்கு கிடைக்கிறேன். என்னிடம் மட்டும் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்கிறீர்கள் என அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2023, 9:22 am

DIN

நான் மட்டும் தான் உங்களுக்கு கிடைக்கிறேன். என்னிடம் மட்டும் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்கிறீர்கள். நீட் ரத்து போராட்டத்தில் பங்கேற்பாரா என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேளுங்கள் என விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக அவர் பேசுகையில், புது தில்லிக்கு குடியரசு தின அணிவகுப்பு செல்லும் மாணவர்கள் இனி ரயிலில் பயணம் செய்யாமல் வரக்கூடிய காலங்களில் இலவசமாக விமானத்தில் பயணிக்கலாம் என விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பினையும் வெளியிட்டார்.

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் மாநில இளைஞர் திருவிழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், விளையாட்டுத்துறை செயலாளர் அத்துல்யா மிஸ்ரா மற்றும் சென்னை மண்டலத்திற்குட்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

உதயநிதி ஸ்டாலின் மாணவர்களிடயே பேசுகையில், எந்த ஒரு செய்தியும் பகிர்வதற்கு முன்பு உண்மையா என்ன என்பதை அறிந்து நீங்கள் அதைத் தவிரக்க வேண்டும், பொய்யான வதந்தி உள்ள செய்திகள் தான் இன்றைக்கு பல பிரச்சனைகளை உருவாக்குகிறது,

நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் வருடம்தோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்திற்காக டெல்லி செல்வது வழக்கம். அவர்கள் அனைவரும் இதுவரை ரயிலில் தான் சென்றுள்ளனர். நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் தில்லிக்கு விமான மூலமாக செல்வதற்கு உதவ வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. அதனை ஏற்று வருகிற குடியரசு தினத்தன்று விமான மூலம் பயணிக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாரை சந்தித்தபோது, நீட் தேர்வுக்கு எதிரான உங்கள் போராட்டத்தை நாடகம் என ஈபிஎஸ் விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு?

நாடகமாகவே இருக்கட்டும். அந்த நாடகத்திலாவது நீங்களும் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள் என்று அழைத்தேன். நீட் தேர்வு ரத்தானால் அதன் முழு பெருமையையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். இப்போதும் கூறுகிறேன். 21 மாணவர்களை இழந்தது போதாதென்று இப்போது பெற்றோரையும் இழக்கத் தொடங்கிவிட்டோம்.
 
நீட் ரத்து அதிமுகவின் கொள்கையும் தானே? நான் அழைத்ததற்கு எடப்பாடி என்ன பதில் சொல்கிறார் என்று கேட்டீர்களா? நான் மட்டும் தான் உங்களுக்கு கிடைக்கிறேன். என்னிடம் மட்டும் மீண்டும் மீண்டும் கேட்கிறீர்கள் அவரிடம் கேளுங்கள் என்று பதிலளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.