திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ரயில் தீ விபத்து: சுற்றுலா நிறுவனம் மீது வழக்கு!

மதுரை ரயில் நிலையம் அருகே சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தெற்கு ரெயில்வே காவல் துறை வழக்குப் பதிந்துள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2023, 2:52 pm IST

மதுரை ரயில் நிலையம் அருகே சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தெற்கு ரெயில்வே காவல் துறை வழக்குப் பதிந்துள்ளது.

மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மீது காவல் துறை வழக்குப் பதிந்துள்ளது. தனியார் நிறுவன உரிமையாளரை கைது செய்ய லக்னெள காவல் துறைக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.