உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

சீமானை கைது செய்ய வேண்டும்: நடிகை விஜயலட்சுமி புகார்

திருமணம் செய்து ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:25 am IST

சென்னை: திருமணம் செய்து ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார்.

சீமானுக்கு எதிராக ஏற்கெனவே 2011-ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். மேலும், கடந்த 2020-ஆம் ஆண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விஜயலட்சுமி உயிர் பிழைத்தார்.

இந்நிலையில், திருமணம் செய்து ஏமாற்றிய சீமானை கைது செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையரை இன்று நேரில் சந்தித்து மீண்டும் விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார்.

அவருடன் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமியுடன் காவல் ஆணையரை சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வீரலட்சுமி பேசியது:

“கடந்த 2008-ஆம் ஆண்டு முதல்முறையாக சீமானை விஜயலட்சுமி சந்தித்தார். அதன்பிறகு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட சீமான், நிபந்தனை ஜாமின் பெற்று மதுரையில் தங்கியிருந்தார். அப்போது, விஜயலட்சுமியை தொடர்பு கொண்ட சீமான் மதுரைக்கு அழைத்தார்.

சீமானின் அழைப்பின் பேரில் 4 முறை விஜயலட்சுமி மதுரைக்கு சென்று வந்தார். அதற்கான ஆதாரங்கள் காவல் ஆணையரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை மாற்றி விஜயலட்சுமியை சீமான் திருமணம் செய்து கொண்டார். பெரியார் கொள்கையை பின்பற்றுவதாலும், கிறிஸ்துவர் என்பதாலும் தாலி கட்டும் பழக்கம் இல்லை என்று சீமான் அப்போது தெரிவித்தார்.

சென்னையில் பிரபாகரன் தலைமையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், அதனால் திருமணம் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.” என்று குற்றச்சாட்டு முன்வைத்தனர்.

தொடர்ந்து, நடிகை விஜயலட்சுமி பேசுகையில், “என்னை ஏமாற்றிய சீமானை கைது செய்ய வைக்காமல் விடமாட்டேன். சீமானை கைது செய்யும்வரை போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.