செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு உபரி நீர் வெளியேற்றம் 3,000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது.


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு உபரி நீர் வெளியேற்றம் 3,000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது.
முன்னதாக 400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு 3,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது வடகிழக்குப் பருவமழை காரணமாக தொடா்ந்து பெய்து வரும் கன மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்து அளவு அதிகரித்து வருவதால், ஏரியின் நீரளவு வேகமாக உயா்ந்து வருகிறது.
இதையும் படிக்க: அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தற்போது ஏரியின் நீர்மட்டம் மொத்தமுள்ள 24 அடியில் 22.69 அடியாகவும் கொள்ளளவு 3,038 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...