தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விரைவில் நிலைமை சீரடையும் என்று நம்புகிறோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

விரைவில் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையோடு களப்பணியைத் தொடர்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :6 டிசம்பர் 2023, 12:35 pm

DIN

விரைவில் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையோடு களப்பணியைத் தொடர்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வெள்ள நீர் தேங்கியுள்ள இடங்களில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க, வெள்ள நீரை அகற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல தன்னார்வலர்களும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்  முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், 

'சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாத நிலை நீடிக்கிறது. உணவு, பால் போன்ற அத்தியாவசியத் தேவைகள் அனைவர்க்கும் கிடைப்பதை உறுதிசெய்ய, களத்தில் பலரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையோடு களப்பணியைத் தொடர்கிறோம்!' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.