பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மழை பாதிப்பு: ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறார் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் 

‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாளை சென்னை வருகிறார். 

News image
Updated On :8 டிசம்பர் 2023, 4:22 pm

DIN

‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாளை சென்னை வருகிறார். 

மிக்ஜம் புயலின் காரணமாக சென்னையில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளிலும், நீா்நிலைகள் அருகே உள்ள பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணி கடந்த 5 நாள்களாக நடைபெற்று வருகிறது.

இதன் விளைவாக பாதிப்பில் இருந்து சென்னை மெல்ல இயல்பு நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. ரயில்கள், பேருந்துகளின் இயல்பான தினசரி சேவையை வியாழக்கிழமை தொடங்கியது. மழைநீா் தேக்கத்தால் பல இடங்களில் மூடப்பட்டிருந்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள் பெரும்பாலானவை திறக்கப்பட்டன.

இந்த நிலையில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாளை சென்னை வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் முடிச்சூர், வரதராஜபுரம், சென்னையின் மேற்கு மாம்பலம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்ய உள்ளார்.

முன்னதாக ‘மிக்ஜம்’புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிச.7ஆம் தேதி சென்னை வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.