லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விவாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த டிச. 1 ஆம் தேதி கைது செய்தனா்.
அங்கித் திவாரியின் வீடு, மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அவரது தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜே.மோகனா முன் டிச. 1 ஆம் தேதி அங்கித் திவாரி முதல்முதலில் ஆஜா்படுத்தப்பட்டார். அப்போது அவரை டிச. 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தலைமை நீதித்துறை நடுவா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய விவகாரத்தில், திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரி இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்படி, அங்கித் திவாரியை 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிக்க | மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 15 மணி நேர சோதனை நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரானின் 304 ஏவுகணைகளை அழித்தது ஐக்கிய அரபு அமீரகம்!
மேற்காசிய பதற்றம்: வளைகுடாவிலிருந்து இரு வாரங்களில் 2 லட்சம் பயணிகள் தாயகம் திரும்பினர்!

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
வர்த்தக வாகனங்களின் விலையை 1.5% உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

