விருதுநகர் மாவட்ட ஆட்சியருடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!
விருதுநகர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.


விருதுநகர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து அதி கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி செல்லும் வழியில் விருதுநகர் மாவட்டத்திற்குச் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளருடன் ஆலோசனை மேற்கொண்டார். விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று(திங்கள்கிழமை) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்டத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறார்.
இதையும் படிக்க | நெல்லை செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...