குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நெல்லை செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

தொடர் கனமழையால் தென் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமை குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) மாலை நெல்லை செல்கிறார். 

News image
நெல்லையில்...
Updated On :18 டிசம்பர் 2023, 6:33 am

DIN

தொடர் கனமழையால் தென் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமை குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) மாலை நெல்லை செல்கிறார். 

தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து அதி கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக, நெல்லை மாநகர் முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.  தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட அறிவியல் மையம், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) மாலை நெல்லை செல்கிறார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின்பேரில் உதயநிதி நெல்லை செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.