அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை இழந்தார் பொன்முடி!

பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை அவர் இழந்துள்ளார்.
பொன்முடி
பொன்முடி

பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை அவர் இழந்துள்ளார்.

கடந்த 2006-ஆம் ஆண்டுமுதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உயா்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிமவளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தாா். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1 கோடியே 75 லட்சம் சொத்துகள் சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு சாா்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு அதாவது 64.90% அளவுக்கு அமைச்சா் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து குவித்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளதால், இருவரும் குற்றவாளிகள் என்று  சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். 

இருப்பினும், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையை நிறுத்தி வைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 30 நாள்கள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பதவியையும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் பொன்முடி இழந்துள்ளார்.

திருக்கோவிலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பொன்முடி இழந்துள்ளார். 

பொன்முடியின் சிறைத் தண்டனை 30 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தற்போது பொன்முடி சிறைக்கு செல்ல வேண்டியதில்லை என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com